'ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள் தமிழகத்தை இருளில் மூழ்கடித்த தவெக அரசு'; நயினார் நாகேந்திரன் விமர்சனம்..! - Seithipunal
Seithipunal


கொளுத்தும் அக்னி வெயிலில் மின்சாரத்தைத் துண்டித்து குழந்தைகளையும், முதியவர்களையும் படாதபாடு படுத்துவது தான் தவெக அறிவித்த மாற்று அரசியலா? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக அரசை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;

ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள் தமிழகத்தை இருளில் மூழ்கடித்த தவெக அரசு! 

தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்ளிட்ட பிற முக்கியப் பகுதிகளில் தொடர் மின்வெட்டு காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த முறை தமிழகத்தை தவிக்க வைத்த திமுக அரசுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தற்போதைய தவெக அரசும் மக்களை இப்படி வதைப்பது கடும் கண்டனத்திற்குரியது. 

கொளுத்தும் அக்னி வெயிலில் மின்சாரத்தைத் துண்டித்து குழந்தைகளையும் முதியவர்களையும் படாதபாடு படுத்துவது தான் தவெக தம்பட்டம் அடித்த மாற்று அரசியலா? ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று கூறிவிட்டு, இப்படி மொத்தமாக மாநிலத்தின் மின்சார உபயோகத்தையே தடுத்து நிறுத்துவது அப்பட்டமான ஏமாற்று வேலை. 

மேலும், தவெக அரசின் இந்த தொடர் மின்வெட்டால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் முடங்குவதோடு, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. எனவே, தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் கிடைக்க முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nainar Nagendran criticizes the TVK government for plunging Tamil Nadu into darkness within just one month of assuming power


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->