செத்துமடியும் உயிரினங்களை காக்க,  உணவுகளை ஹெலிகாப்டரின் உதவியுடன் வைக்கும் அரசு...! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள தென்கிழக்கு பகுதியில் இருக்கும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் மற்றும் விக்ட்டோரியா மாகாணத்தில் செப்டம்பர் மாதத்தின் முதலாகவே காட்டுத்தீயானது பற்றியெறிந்து வருகிறது. 

பற்றியெரியும் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த காட்டுத்தீகிக்கு தற்போது வரை 24 பேர் பலியாகியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கில் உயிரினங்கள் இறந்துள்ளது. 

காட்டுட்த்தீயில் இருந்து விலங்குகளை காக்க தன்னார்வலர்கள் மற்றும் மீட்பு படையினர் தொடர்ந்து போராடிக்கொண்டு வரும் நிலையில், காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்கான தாவரங்கள் மற்றும் பயிர்கள் கருகி நாசமாகியுள்ளது. 

இதனால் காட்டுவிலங்குகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டதால், ஹெலிகாப்டர் மூலமாக கேரட்டுகள் மற்றும் உருளைக்கிழங்குகளை வனப்பகுதியில் அந்நாட்டு அரசு கொட்டிவருகிறது. 

இது தொடர்பாக அதிகாரிகள் தெரிவித்த நேரத்தில், காட்டுத்தீயினை கட்டுப்படுத்த முயற்சிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிர் பிழைத்த விலங்குகளுக்கு டன் கணக்கில் கேரட் மற்றும் உருளைக்கிழங்குகளை ஹெலிகாப்டரின் உதவியுடன் வனப்பகுதியில் வீசி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Australia forest fire govt give food


கருத்துக் கணிப்பு

திமுக காங்கிரஸ் கருத்து யுத்தம்..! சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி
கருத்துக் கணிப்பு

திமுக காங்கிரஸ் கருத்து யுத்தம்..! சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி
Seithipunal