இம்ரான்கானுக்கு அதிகரிக்கும் ஆதரவு - பரபரப்பில் பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்.! - Seithipunal
Seithipunal


336 நாடாளுமன்ற தொகுதிகள் கொண்ட பாகிஸ்தான் நாட்டில் 266 தொகுதிகளுக்கு நேரடியாக மக்கள் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் பிரதமர்களான இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் உள்ளிட்ட கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், நேற்று அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதற்காக நாடு முழுவதும் 90 ஆயிரத்து 582 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சுமார் 65 ஆயிரம் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அதுமட்டுமல்லாமல் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக முக்கிய இடங்களில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்தல் முடிந்ததும் உடனே வாக்கு எண்ணும் பணி ஆரம்பமானது. 

இதில், இம்ரான் கானின் பிடிஐ கட்சியினர் அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்தக் கட்சியினர் பல இடங்களில் தேர்தல் முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்து இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இந்தத் தேர்தலில் இம்ரான்கானின் பிடிஐ சின்னத்திற்கு பேட் சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்ததனால், இம்ரான் கான் கட்சியினர் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

imrankhan leading election result in pakisthan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->