பரபரப்பு! சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் 10 ஏவுகணைகளை கொண்டு அழிப்போம்...! பாகிஸ்தான் ராணுவ தளபதி
If India builds dam Indus River we destroy it 10 missiles Pakistan Army Chief
பாகிஸ்தான் நாட்டு ராணுவ தளபதி ''ஆசிம் முனீர்'' அவர்கள் அமெரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.அங்கு விமர்சையாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் தெரிவித்ததாவது,"சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டட்டும் என்றுதான் நாங்கள் காத்திருக்கிறோம்.

அணை கட்டினால், 10 ஏவுகணைகளால் அதை அழிப்போம். சிந்து நதி இந்தியர்களின் குடும்ப சொத்து அல்ல. எங்களிடம் ஆயுதப் பற்றாக்குறை ஏதுமில்லை” என்று காட்டமாக தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி,எதிர்காலத்தில் "இந்தியாவிடமிருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டால் உலகின் பாதி நாடுகளை அழித்துவிடுவோம்" என்ற தொனியிலும் பாகிஸ்தான் ராணுவ தளபதி தெரிவித்தார். இதற்கு முன்பாகவே,வரிவிதிப்பால் இந்தியா - அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க மண்ணில் இருந்தவாறு இந்தியாவுக்கு பாகிஸ்தான் தளபதி மிரட்டல் விடுத்திருப்பது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்திய-பாகிஸ்தான் மோதலுக்கு பிறகு அவ்வப்போது பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
If India builds dam Indus River we destroy it 10 missiles Pakistan Army Chief