பூமியில் வாழ்வதற்கான 8 பாதுகாப்பான வரம்புகளில் 7ஐ தாண்டிவிட்ட மனிதர்கள்..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..! - Seithipunal
Seithipunal


இயற்கை நிகழ்வுகள் மற்றும் மனித செயல்பாடுகளால் பூமியில் ஏற்படும் காலநிலை மாற்றம், வெப்பத்தின் தாக்கம் மற்றும் புவிசார் பிரச்சினைகள் குறித்து எர்த் கமிஷன் என்ற குழு சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. சுமார் 40 முன்னணி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வெளியிட்ட அறிக்கையில், அறிவியல் பூர்வமாக நிறுவப்பட்ட எட்டு பாதுகாப்பு வரம்புகளில் 7-ழை தாண்டிவிட்டதாக தெரிவித்துள்ளது. 

மேலும் பூமி ஆபத்து மண்டலத்தில் இருக்கிறது. அதிகப்படியான வளங்கள் சுரண்டல், பருவநிலை மாற்றம், பனிப்பாறை உறுகுதல், வனப்பகுதியில் மனித ஆதிக்கம் மற்றும் அதீத வெப்பநிலை உயர்வு ஆகியவற்றால் நாளுக்கு நாள் பூமியில் தாக்கம் ஏற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து கிழக்கு ஐரோப்பா, தெற்காசியா, மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, பிரேசில், அமெரிக்கா, மெக்சிகோ, சீனா என 8 பாதுகாப்பு வரம்பு பகுதிகளில் 7 பகுதிகள் அங்கீகரிக்கப்பட்ட வரம்பை தாண்டி ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் உலக நாடுகள் விரைவில் விழித்துக் கொள்ளாவிட்டால் பூமியில் உள்ள மொத்த உயிரினங்களும் அழிய நேரிடும் என ஆணையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Humans have exceeded 7 of the 8 safe limits for living on Earth


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->