6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! குற்றவாளிக்கு ஆண்மை நீக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு...!
harassement on 6 year old girl Court orders castration culprit
மடகாஸ்கர் தீவு நாடான, இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்த தலைநகர் அன்டனநாரிவோவிலிருந்து 30 கி.மீ. மேற்கே ஐமெரீன்ட்சியாடோசிகா என்ற நகரமுள்ளது.

அங்கு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொல்ல முயன்ற வழக்கில், குற்றவாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் (castration) செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அரசு வழக்கறிஞர் நடிடியர் ரசாபின்ட்ரலாம்போ, "இந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், கடுமையான வேலைகளுடன் ஆண்மை நீக்க தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற தீய எண்ணம் கொண்டவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை" என்று தெரிவித்துள்ளார்.மேலும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் வழக்குகளுக்கு 2024 இல் மடகாஸ்கரில் இதுபோன்ற கடுமையான தண்டனையை வழங்க சட்டம் கொண்டுவரப்பட்டது.
ஆனாலும், மனித உரிமை அமைப்புகள் இந்த இரு நடைமுறைகளையும் விமர்சித்துள்ளன.
English Summary
harassement on 6 year old girl Court orders castration culprit