உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்.. முதல் இடத்தில் பின்லாந்து.. இந்தியாவிற்கு எந்த இடம்.? - Seithipunal
Seithipunal


உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்காக 149 நாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வரும் இந்தப் பட்டியல் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு, சுகாதார வாழ்க்கை, மொத்த மக்கள் தொகை, உங்களுடைய சொந்த வாழ்வை முடிவு செய்யும் சுதந்திரம் மற்றும் ஊழல் அளவு ஆகியவை அளவுகோல்களாக மேற்கொள்ளப்பட்டு மெகா சர்வே எடுக்கப்படுகிறது.

இதில் 55.5 லட்சம் மக்கள் தொகை கொண்ட பின்லாந்து 7.842 புள்ளிகளுடன் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது.

அதனைத் தொடர்ந்து டென்மார்க் (7.620) 2-வது இடத்தையும், ஸ்விட்சர்லாந்து (7.571) 3-வது இடத்தையும், ஐஸ்லாந்து (7.554) 4-வது இடத்தையும், நெதர்லாந்து (7.464) 5-வது இடத்தையும், நார்வே (7.392) 6-வது இடத்தையும், ஸ்வீடன் 7-வது (7.363) இடத்தையும் பிடித்துள்ளன.

இதில் 2021 ஆம் ஆண்டிற்கான உலகின் முதல் ஏழு மகிழ்ச்சியான நாடுகள் அனைத்தும் வட ஐரோப்பிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் இந்தியா 136-வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் நமது அண்டை நாடான பாகிஸ்தான் (4.9 புள்ளிகளுடன் ) 103வது இடமும், இலங்கை (4.3 புள்ளிகளுடன் 126-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு 149-வது இடத்தில் உள்ளது. ஜிம்பாவே, ருவாண்டா, போட்ஸ்வானா மற்றும் லெசோதோ ஆகிய நாடுகள் கடைசி 5 இடங்களை பிடித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Happiest countrys in world level list


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->