அரசுக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறை.! 22 பேர் பரிதாப பலி.!! கொந்தளிப்பின் உச்சத்தில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கு வழங்கப்படும் அரசு மானியங்கள் திடீரென நிறுத்தப்பட்டதால் ரொட்டியின் விலையானது அதிரடியாக உயர்ந்தது. இந்த விசயமானது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி., இதனை எதிர்த்து சமூக ஆர்வலர்கள்., எதிர்க்கட்சியின் மற்றும் மக்கள் ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சாலை மறியல்., கடைகள் சூறையாடல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதன் காரணமாக., அவர்களை ஒடுக்குவதாரக்காக காவல் துறையினர் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர். மேலும்., இந்த போராட்டத்தில் காவல் துறையினருக்கும் கலவரகாரர்களுக்கும் இடையே போராட்டம் வன்முறையாக மாரி இதனால் கடந்த மாதத்தின் இறுதியில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

இந்நிலையில்., கடந்த புதன் கிழமையன்று நடைபெற்ற அதிபர் பஷீருக்கு ஆதரவான பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற நிலையில்., எதிர் போராட்டக்காரர்களும் போராட்டம் நடத்தி வந்ததால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர். 

அந்த நேரத்தில் அங்கிருந்த போராட்டக்காரர்கள் அரசிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பவே., அவர்களை கட்டப்படுத்தும் வழியில் காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடிக்க துவங்கினர்., அந்த நேரத்தில் போராட்டக்கார்களில் சுமார் 3 பேர் பரிதாபக உயிரிழந்தனர்., பலர் படுகாயமந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இறந்தவர்களில் மூவர் எப்படி இருந்தனர் என்பது குறித்த தகவல் வெளியாகாத நிலையில்., அவர்கள் வன்முறையில் இறந்ததாகவும், மொத்தம் 22 பேர் வன்முறையால் உயிரிழந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து தனது கருத்தை பதிவு செய்த நியூயார்க் மனித உரிமை ஆணையமானது தற்போது வரை 40 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GOVT AGAINST STRIKE IN SUDAN COUNTRY 22 PEOPLES DIED


கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
Seithipunal