அமெரிக்கா | ஃப்ரீசரில் கிடந்த உடல் பாகம்! விசாரணையில் வெளிவந்த பெண்களின் அவல நிலை!
freezer in body part find shocking information
அமெரிக்கா, ப்ரூக்ளின் நகரை சேர்ந்தவர் சோமோரி மோசஸ் (வயது 47) இவர் பல பெண்களுடன் 2003 ஆம் ஆண்டில் இருந்தே தொடர்பு கொண்டு ஆசை வார்த்தைகளை காட்டி அவர்களை பாலியல் ரீதியான தொழிலில் ஈடுபடுத்தி வந்தார்.
மேலும் அவர்கள் தன்னை விட்டு வெளியேறுவதை தடுக்க அவர்களது உடலில் சோமோரி என அவரது பெயரை பச்சை குத்தி விடுவார்.
ஒரு பெண் இவரை விட்டு தப்பிக்க முயன்ற போது அவரை அடித்து துன்புறுத்தி காயங்கள் மீது எலுமிச்சை சாறு ஊற்றி கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
மற்றொரு பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டி இது போன்ற தொழிலில் ஈடுபட வைத்தார். 2017 ஆம் ஆண்டு லியாண்ட்ரா ஃபாஸ்டர் (வயது 32) என்ற பெண்ணை அடித்து கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி அவரது வீட்டில் உள்ள ஃப்ரீசரில் மறைத்து வைத்திருந்தார்.

மேலும் சில உடல் பாகங்களை அழித்து விட்டார். லியாண்ட்ரா காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் காவல் துறையினர் சோமோரியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்திய போது அவரது வீட்டில் 'சோமோரி' என பச்சை குத்தப்பட்ட ஒரு உடல் பாகம் கிடைத்தது.
இதனை தொடர்ந்து போலீசார் சோமோரியை தீவிர விசாரணை செய்து கைது செய்தனர். குற்றத்தை ஒப்புக்கொண்டு அவருக்கு 15 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
English Summary
freezer in body part find shocking information