7 ஆண்டுகள் திருமண வாழ்க்கை முறிவு; நடிகரான  கணவரை பிரியும் முன்னாள் உலக அழகி..! 
                                    
                                    
                                   Former Miss World Angela Martini splits from actor husband after 7 years of marriage
 
                                 
                               
                                
                                      
                                            அல்பேனியா நாட்டின் முன்னாள் உலக அழகியான ஏஞ்சலா மார்டினிக்கும், ஹாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான டிராகோ சவுலேஸ்குவுக்கும் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு கைரி என்ற 03 வயது குழந்தை உள்ளது. 
முன்னதாக, டிராகோ சவுலேஸ் தனது சொந்த நாடான ருமேனியாவில் சில சட்ட சிக்கல்களில் சிக்கியதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. 

இந்நிலையில், 07 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்ள முடிவு செய்து, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி, நேற்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதாவது, கணவருடன் ஏற்பட்ட 'தீர்க்க முடியாத கருத்து வேறுபாடுகள்' காரணமாக பிரிவதாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அத்துடன், தாங்கள் சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். 
மேலும், தங்களது 03 வயது குழந்தை கைரியை இருவரும் சேர்ந்து வளர்க்கும் வகையில் கூட்டு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், தனது செலவுகளுக்காக கணவர் டிராகோ சவுலேஸ்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனவும்  ஏஞ்சலா மார்டினிக் கோரிக்கை வைத்துள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       Former Miss World Angela Martini splits from actor husband after 7 years of marriage