நடுவானில் விபத்துக்குள்ளான விமானங்கள் - 5 பேர் பலி.!!
five peoples died for flight accident in finland
எஸ்தோனிய நாட்டின் தலைநகர் தாலினில் இருந்து ஒரே நேரத்தில் புறப்பட்ட இரண்டு ஹெலிகாப்டர்கள், பின்லாந்தின் யூரா விமான நிலையத்திற்கு அருகில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டர்களில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இரண்டு ஹெலிகாப்டர்களும் பின்லாந்திற்கு வெளியே பதிவு செய்யப்பட்டவை என்பது தெரிய வந்தது.
அதாவது, ஒரு ஹெலிகாப்டர் எஸ்டோனியாவிலும், மற்றொன்று ஆஸ்திரியாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த ஹெலிகாப்டரின் பக்கங்கள் கவுட்டுவா நகருக்கு அருகே, ஓஹிகுல்குட்டி சாலையில் இருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் விழுந்துகிடப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக் குறித்து போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
English Summary
five peoples died for flight accident in finland