60 நாட்களுக்கு மீன்பிடி தடை காலம் அமல்: படகுகள், வலைகள் சீரமைப்பில் ஈடுப்படும் மீனவர்கள்..!
Fishing ban imposed for 60 days Fishermen engaged in repairing boats and nets
தமிழகத்தில் கிழக்கு கடற்கரையில் மீன்களின் இனப் பெருக்க காலத்தை கணக்கில் கொண்டு ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி முதல் 60 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால், மீனவர்கள் விசைப்படகுகளை பழுது நீக்குதல் மற்றும் வலைகள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விசைப்படகு மீனவர்கள் ஓய்வில் இருந்து வருகின்றனர்.
இதனால் தமிழகத்தில் 06 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. அத்துடன், நாகை மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 02 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையேற்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த தடைகாலத்தை தொடர்ந்து நாகை மீன்பிடி துறைமுகம் மற்றும், கடுவையாறு பகுதிகளில் இன்ஜின் பழுது நீக்கம், படகு சீரைமத்தல், வலைகள் மற்றும் மீன்பிடி சாதனைங்களை பழுது நீக்கம் செய்தல், படகுகளில் வர்ணம் அடித்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
ஒரு படகினை பழுது நீக்கி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்கள் ஆகும். அத்துடன், படகு ஒன்றுக்கு ரூ. 03 லட்சத்தில் இருந்து ரூ. 05 லட்சம் வரை செலவாகும் என்று மீனவர்கள் கோவூட்டுகின்றனர். இவ்வாறு மீன்பிடி உபகரணங்களை சீரமைக்க ஏற்படும் செலவுகளை ஒன்றிய அரசு மானியத்தில் வங்கி கடனாக வழங்கினால் நன்றாக இருக்கும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
English Summary
Fishing ban imposed for 60 days Fishermen engaged in repairing boats and nets