பஞ்சாப் எல்லையில் சீன ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள் - ஆயுதங்களை வீசும் பாகிஸ்தான்..!
Pakistan drops drugs and weapons through Chinese drones on Punjab border
சீனாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்தியாவின் பஞ்சாப் எல்லையில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை பாகிஸ்தான் வீசிச் செல்லுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னரும் பாகிஸ்தானின் அத்துமீறல்கள் குறையவில்லை என எல்லைப் பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 10-ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவித்த பின்னரும், பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்திய எல்லையில் போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து, கடந்த 11-ஆம் தேதி பிஎஸ்எஃப் மற்றும் பஞ்சாப் காவல்துறையின் கூட்டு நடவடிக்கைகளின் மூலம், அமிர்தசரஸ் மாவட்டம் ஷேக் பட்டி கிராமத்திற்கு அருகே மஞ்சள் நிற போதைப் பொருள் பாக்கெட் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதேநாளில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது, பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களுடன் கூடிய ட்ரோன்கள் பறந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
பெரும்பாலும் சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்த ட்ரோன்கள் போதைப்பொருள், துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை சப்ளை செய்வதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்று பிஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் தெரிவித்தாதுள்ளார்.

பாகிஸ்தானின் இந்த ட்ரோன் நடவடிக்கைகள் இந்தியாவில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கும், இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும் மேற்கொள்ளப்படுவதாக பிஎஸ்எஃப் குற்றம் சாட்டியுள்ளது.
இதன்காரணமாக, எல்லைப் பாதுகாப்பு படையினர் ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தானில் இருந்தும் வரும் ட்ரோன்களை பறிமுதல் செய்யவும், அவற்றின் பயணப் பாதைகளை ஆய்வு செய்து அவற்றின் செயல்பாடுகளை முடக்கி வருகின்றனர்.
English Summary
Pakistan drops drugs and weapons through Chinese drones on Punjab border