பிரபல பாடகர் துருக்கியில் கைது: பின்னணியில் அதிர்ச்சி தகவல்!
Famous singer arrested Turkey
அரசை விமர்சனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பிரபல பாடகர் துருக்கியில் கைது செய்யப்பட்ட ஈரான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
டடலூ எனப்படும் அமீர்ஹூசைன் மக்சூட்லூ, ஈரானிய தலைவர்களை விமர்சனம் செய்துவிட்டு துருக்கிக்கு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
எதற்காக துருக்கி காவலர்களால் கைது செய்யப்பட்டார் என்பதற்கான சரியான விளக்கம் கிடைக்கவில்லை எனினும் இஸ்தான்புல்லில் தான் தங்கி இருக்கும் வீட்டுக்கு அடிக்கடி சிறுவர், சிறுமிகளை அழைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய கலைஞர்கள், பிரபலங்கள் மீது பாலியல் தொடர்பான பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருவது வழக்கமான ஒன்றாகும்.
ஈரானில் டடலூ ஒருபோதும் இசை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்பட்டதில்லை. ஆனால் இவருக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பெண்கள் தொடர்பாக தவறான கருத்துக்களை பதிவிடுவதாகவும் குழந்தை திருமணத்தை ஆதரிப்பதாகவும் தெரிவித்து இவரது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டது.
இவர் கடந்த 2015ல் ஈரான் அரசுக்கு இசை வீடியோ ஒன்றை உருவாக்கி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Famous singer arrested Turkey