மீண்டும் விளக்கம்...! 'ஜெப்ரி எப்ஸ்டீனுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை' - டொனால்ட் டிரம்ப் - Seithipunal
Seithipunal


சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை ஏமாற்றி, பணக்காரர்களின் இச்சைகளுக்கு ‘பொருளாக’ மாற்றிய குற்றச்சாட்டில் உலகளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன்.

இவர் தனது சட்டவிரோத செயல்பாடுகளுக்காக தனிப்பட்ட தீவையே அமைத்து, அங்கு பல்வேறு இரகசியச் செயல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இவர் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைது செய்யப்பட்டு நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் அதே ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி, சிறை அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது. இந்த மரணம் பல சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியது.

எப்ஸ்டீன் தனது வாடிக்கையாளர்கள் மற்றும் தொடர்புடையவர்களைப் பற்றிய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட ஏராளமான ஆதாரங்களை முறையாக சேமித்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்டுகிறது. இவை அனைத்தும் “எப்ஸ்டீன் கோப்புகள்” என அழைக்கப்படுகின்றன.

நீதிமன்ற உத்தரவின்படி, இலட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த ஆவணங்கள் படிப்படியாக பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டு வருகின்றன.அந்தக் கோப்புகளில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய வாக்குமூலங்களும் இடம்பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனால் அரசியல் வட்டாரங்களில் கடும் பரபரப்பு உருவாகி, பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.இந்த சர்ச்சை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “எப்ஸ்டீன் விவகாரத்தில் நான் மறைக்க எதுவும் இல்லை. அந்த வழக்கில் நான் முழுமையாக விடுவிக்கப்பட்டேன்.

ஜெப்ரி எப்ஸ்டீனுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. உண்மையில், நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்று அவர் சிலருடன் சேர்ந்து எதிர்த்தார்” என்று விளக்கம் அளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Explanation again I have no connection Jeffrey Epstein Donald Trump


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->