கோட்டையின் ஒற்றுமையைக் கண்டு வியந்த கமல்...! - 'அனைத்து எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேறியது பாராட்டுக்குரியது'...! - Seithipunal
Seithipunal


மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று முக்கியமான விவாதம் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அரசினர் தனித்தீர்மானத்தை முன்வைத்து உரையாற்றினார்.

காவிரி பிரச்சினை என்பது தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுகளோடு பின்னிப்பிணைந்த மிக முக்கியமான உரிமைச் சிக்கலாகும்.

எனவே, மேகதாது அல்லது காவிரி படுகையின் வேறு எந்த பகுதியிலும் புதிய அணை அல்லது நீர்த்தேக்கத் திட்டங்களை, பிற படுகை மாநிலங்களின் இசைவும் மத்திய அரசின் ஒப்புதலும் இன்றி கர்நாடக அரசு மேற்கொள்ளக்கூடாது என மத்திய அரசை சட்டப்பேரவை வலியுறுத்தியுள்ளது.

மேலும், கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை எடுக்கவோ அல்லது எந்தவித அனுமதியும் வழங்கவோ கூடாது என்று மத்திய நீர்வள அமைப்புக்கும் பேரவை வலுவான கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்மொழிந்த தனித்தீர்மானத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.இறுதியில், மேகதாது அணைக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவிக்கப்படுவதாவது,"காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பையும், 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை அமைக்க கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தது பாராட்டத்தக்க செயலாகும்.

அத்துடன், அந்த தீர்மானம் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருப்பது தமிழ்நாட்டின் நீர்வள உரிமைக்கான உறுதியான அரசியல் குரலாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டின் நீர் உரிமையையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் நேரடியாக பாதிக்கும் மேகதாது அணை விவகாரத்தில் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து, அனைவரும் ஒரே அணியில் நின்று ஒற்றுமையான குரலை வெளிப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழக நலனை முன்னிறுத்தி ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் மனதார பாராட்டுகிறேன்".இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kamal amazed by unity fort commendable that resolution passed support MLAs


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->