பிரேசில் : முன்னாள் அதிபர் அமெரிக்க மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் பிரேசில் நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை விட அதிபர் ஜெர் போல்சனேரோ குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில், தோல்வியடைந்தார். 

இதையடுத்து, பிரேசில் நாட்டின் புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால், தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 

அதிலும் குறிப்பாக, போல்சனேரோவின் தோல்வியை ஏற்றுக்கொள்ளாத அவரது ஆதரவாளர்கள் நேற்று பிரேசில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

இதேபோன்று, ஜனாதிபதி மாளிகை, உச்சநீதிமன்ற வளாகம் உள்ளிட்டவை முன்பு திரண்ட போல்சனேரோவின் ஆதரவாளர்கள் நாட்டின் தற்போதைய அதிபராக உள்ள லூயிஸ்-க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால், பிரேசிலில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

தனது ஆதரவாளர்கள் பிரேசிலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்த நிலையில் முன்னாள் அதிபர் போல்சனேரோ உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவின் ஒர்லெண்டோ மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். 

போல்சனேரோ வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சினையினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போல்சனேரோவில் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. தொடர்ந்து அவரை மருத்துவக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex president Bolsonaro addmitted in america hospital for health issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->