Tesla Dinner என்ற புதிய திட்டத்தை தொடங்கிய எலான் மஸ்க்... சார்ஜ் போடும் போது உணவு...!
Elon Musk has launched a new project called Tesla Dinner food while charging
மின்சார கார் தயாரிப்பதில் உலகின் NO .1 நிறுவனமாக எலான் மஸ்க்கின் டெஸ்லா( TESLA ) நிறுவனம் திகழ்ந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா நாட்டில் டெஸ்லா கார் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக,அந்நாட்டில் ஆங்காங்கே சார்ஜ் போடுவதற்கான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், வாகனத்திற்கு சார்ஜ் போடும் வரை, வாகன ஓட்டி மற்றும் வாகனத்தில் பயணம் செய்பவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த நேரத்தை அவர்கள் உணவருந்துவதற்காக பயன்படுத்தினால், பயணம் நேரம் மிச்சமாகும் என்ற கருத்தைக் கொண்டு TESLA DINER-ஐ லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் டெஸ்லா நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது.
இதில் சார்ஜ் நிலையத்தில் வாகனத்திற்கு சார்ஜ் செய்ய வேண்டும் என்றால், அதற்கு முன்னதாகவே அந்த நிலையத்திற்கு வருவது தொடர்பாகவும், உணவு தேவை என்றால் அது தொடர்பாகவும் ஆர்டர் செய்தால், சார்ஜ் போடும் நேரத்தில் வாகனத்திற்கு உணவு வந்து சேரும்.
இல்லையென்றால் உணவகத்தில் சென்று சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதன் முதற்கட்டமாக லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் TESLA DINER தொடங்கப்பட்டுள்ளது. இது வெற்றி பெற்றால் உலகளவில் விரிவுப்படுத்த மஸ்க் முடிவு செய்துள்ளார்.
English Summary
Elon Musk has launched a new project called Tesla Dinner food while charging