மியான்மரில் 06 புள்ளி ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்: கொல்கத்தாவிலும் உணரப்பட்டுள்ளதால் பதற்றம்; பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம்..!
Earthquake of magnitude 6 strikes Myanmar
மியான்மர் நாட்டில் இன்று ரிக்டர் அளவுகோலில் 06 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு கொல்கத்தாவிலும் உணரப்பட்டுள்ளது.
மியான்மரின் அக்யாப் நகருக்கு கிழக்கே சுமார் 70 மைல் தொலைவில், பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மியான்மரில் கடந்த 71 மணி நேரத்தில் உணரப்பட்ட மூன்றாவது நில அதிர்வு இதுவாகும்.
இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக, இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத் தலைநகரான கொல்கத்தா மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பலத்த அதிர்வுகள் உணரப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. இதன் போது உயரமான கட்டிடங்கள் லேசாகக் குலுங்கியதால், மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம் மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Earthquake of magnitude 6 strikes Myanmar