ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு.!
earthquake in jappan ishikava nagar
ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் ஆக பதிவு.!
ஆசியா கண்டத்தில் உள்ள பல தீவுகளால் ஆன நாடு ஜப்பான். இந்த நாட்டின் மத்திய பகுதியில் உள்ள இஷிகவா நகர் ஹோன்ஷு தீபகற்பத்தில் இன்று மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் லேசாக குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் போலீசார் நிலநடுக்கத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
English Summary
earthquake in jappan ishikava nagar