பீதியை கிளப்பும் சீனாவின் கொரோனா பரவல்! ஒரே நாளில் 31 ஆயிரம் பேர் பாதிப்பு! - Seithipunal
Seithipunal


உலகின் முதன் முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு தான் சீனாவில் கொரோனா நோய் தொற்று பரவல் கண்டறியப்பட்டது. அதன் பிறகு உலகம் முழுவதும் கொரோனா நோய் பல நாடுகளுக்கு பரவியது. இதன் காரணமாக லட்சக்கணக்கானோர் பலியாகினர். உலகம் முழுவதும் கொரோனா பரவலானது மூன்று அலைகளை எட்டிய போதிலும் கடுமையான பொது முறுக்கத்தின் காரணமாக சீனா மட்டும் பெரும் பாதிப்பிலிருந்து தப்பியது.

இந்த நிலையில் சீனாவில் சமீப காலமாக பல்வேறு மாகாணங்களில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருந்தாலும் நாளுக்கு நாள் நோய் பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் சீனாவில் 31,45 4 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சீனாவில் கொரோனா நோய் பாதிப்பு தொற்று கண்டறியப்பட்டதிலிருந்து இதுவே ஒரு நாளில் ஏற்பட்ட அதிகமாக பாதிப்பாகும். இதன் காரணமாக பல்வேறு மாகாணங்களில் ஊரடங்கு போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டு தீவிர கொரோனா பரிசோதனையில் சீனா ஈடுபட்டு வருகிறது. சீனாவில் மீண்டும் ஏற்பட்டுள்ள நோய் தொற்று பரவல் காரணமாக உலக நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona virus spreading level again increased in China


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->