உசைன் போல்ட்டின் 100 மீட்டர் ஓட்ட சாதனையை தகர்த்துள்ள சீனாவின் ஹியூமனாய்டு ரோபோ..! - Seithipunal
Seithipunal


சீனாவில் ஹியூமனாய்டு ரோபோ போட்டியில் உசைன் போல்ட்டின் 100 மீட்டர் ஓட்ட சாதனையை ரோபோ ஒன்று முறியடித்துள்ளது. சீனாவின் பீஜிங் நகரில் ஹியூமனாய்டு ரோபோ போட்டி சனிக்கிழமை தொடங்கியது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த இது ரோபோக்களுக்கான ஒலிம்பிக் போட்டி வகையிலான நிகழ்வில் சுமார் 2,000 ஹியூமனாய்டு ரோபோக்கள் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டாது ஆண்டாக நடைபெறும் இந்த ரோபோ போட்டி நடைபெறுகிறது. ரோபாட்டிக்ஸ் துறையில் சீனா கண்டுள்ள முன்னேற்றத்தை உலகின் பார்வைக்கு கொண்டு வரும் வகையில் இது அமைந்துள்ளது. 51 விளையாட்டு பிரிவுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளதாக போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் தடகளம், டேபிள் டென்னிஸ், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளும் அடங்குக்கிறது.

முன்னதாக கடந்த 2022-இல் குளிர்கால ஒலிம்பிக் தொடருக்காக கட்டப்பட்ட தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் ஓவலில் இந்த போட்டி நடைபெறுகிறது. சர்வதேச அளவில் சீனாவின் ஹியூமனாய்டு ரோபோக்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இத்தகைய சூழலில் வெளிநாட்டில் வடிவமைக்கப்பட்ட புதிய ரோபோக்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதற்கு பல்வேறு குற்றச்சாட்டுகளை அமெரிக்கா அடுக்கி வருகிற நிலையில், சீனாவும் அதற்கு பதிலடியை கொடுத்து வருகிறது,

இந்நிலையில், சனிக்கிழமை அன்று 02-வது ஹியூமனாய்டு ரோபோ போட்டி பீஜிங் நகரில் கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டியில்,  ஜமைக்காவின் மின்னல் வேக வீரர் உசைன் போல்ட்டின் 100 மீட்டர் சாதனை முறியடிக்கப்பட்டது. கடந்த 2009-இல் 100 மீட்டர் தூரத்தை 9.58 விநாடிகளில் உசைன் போல்ட் கடந்திருந்தார். அதை இந்த ரோபோ முறியடித்து 100 மீட்டர் தூரத்தை 9.39 விநாடிகளில் கடந்துள்ளது.

அத்துடன், உயரம் தாண்டுதலிலும் 2.88 மீட்டர் உயரத்தை கடந்து மனிதனின் முந்தைய உலக சாதனையை மற்றுமொரு ரோபோ முறியடித்தது. கியூபாவின் சேவியர் கடந்த 1993-இல் 2.45 மீட்டர் உயரம் தாண்டி உலக சாதனை படைத்தார். அதை இப்போது ரோபோ தகர்த்துள்ளது. இந்த இரண்டு ரோபோவும் பீஜிங்கின் எக்ஸ்-ஹியூமனாய்டு வடிவமைத்த ரோபா என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chinese humanoid robot breaks Usain Bolts 100 meter record


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->