சீனாவில் தென்கொரிய மக்களுக்கு விசா சேவை நிறுத்தம்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி மக்களை அச்சத்தில் உறைய வைத்தது. இதனால் பல நாடுகளில் லட்ச கணக்கில் மக்கள் உயிரிழந்தனர். இதற்காக பல நாடுகளில் 144 தடை போடப்பட்டது.

இந்த தொற்று பரவலைத் தடுப்பதற்காக தடுப்பூசிகள் போடப்பட்டது. அதன் பின்னர் கடந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து கட்டுப்பாடுகள் கொஞ்ச கொஞ்சமாக தளர்த்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்துள்ளது. இதன் காரணமாக அந்த நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா, அமெரிக்கா மற்றும் தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கட்டாய கொரோனா பரிசோதனை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. 

இதற்கு கண்டனம் தெரிவித்த சீனா, குறிப்பிட்ட சில நாடுகள் சீன பயணிகளை மட்டும் குறிவைத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும், பரஸ்பர கொள்கையின் அடிப்படையில் சீனா எதிர் நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் எச்சரிகை விடுத்துள்ளது.

இதையடுத்து, சீன பயணிகளுக்கு தென்கொரியா நாடு கட்டுப்பாடுகளை விதித்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென்கொரிய மக்களுக்கு சீனா விசா வழங்குவதை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக தென்கொரியாவில் உள்ள சீன தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "தென்கொரியா சீன பயணிகள் மீதான நடவடிக்கைகளை நீக்கும் வரை அந்த நாட்டில் இருந்து சீனாவுக்கு சுற்றுலா மற்றும் வணிகத்திற்காக வருபவர்களுக்குரிய விசா நிறுத்திவைக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

china stops visas to south korea peoples


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->