ஏஐ உலகின் அசுர வேகம்; Kimi K3 என்ற புதிய மேம்பட்ட ஏஐ மாடலை அறிமுகப்படுத்தியுள்ள சீனா..! - Seithipunal
Seithipunal


உலக அளவில் ஏஐ தொழிநுட்ப துறையில் சீனாவின் புதிய அதிரடியாக கிமி கே3 மாடலை அறிமுகமாகியுள்ளது. உலகளவில் பிரபலமான கிளாட், சாட் ஜிபிடி போன்ற மாடல்களை விட இது மேம்பட்டது என நிறுவனம் வலியுறுத்துகிறது. 

ஷாங்காய்யில் நடைபெற்ற உலகளாவிய ஏஐ தொழிநுட்ப மாநாட்டில் ''ஏஐ ஆதிக்கம் ஒரே நாட்டுக்குச் செல்லக்கூடாது, உலகளாவிய ஒத்துழைப்பின் பலனாக இருக்க வேண்டும்'' என சீன அதிபர் ஷி ஜின்பிங் கருத்து தெரிவித்து இருந்தார். அதனைத்தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது, ஏஐ துறையில் அமெரிக்க நிறுவனங்களுக்கு கடும்போட்டி சீனா திகழ்கிறது. அதன்படி, அமெரிக்காவுக்கு போட்டியாக சீனா, புதிதாக மேலும் ஒரு திறன் மிகுந்த ஏஐ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. கிமி கே3 என்ற இந்த மாடலை பெய்ஜிங்கை சேர்ந்த மூன்ஷாட் என்ற புத்தாக்க நிறுவனம் உருவாக்கியுள்ளது. 

இந்த ஏஐ மாடல் உலகளவில் பிரபலமாக உள்ள ஆந்த்ரபிக் நிறுவனத்தின் கிளாட் மற்றம் ஓபன் ஏஐ-யில் சாட் ஜிபிடியை விட திறன்மிக்கது என மூன் ஷாட் கூறியுள்ளது.

அதிநவீன தொழில்நுட்பங்கள் சீனாவிற்கு கிடைப்பதற்கு அமெரிக்க பல வழிகளில் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.  ஆனாலும், பல இடையூறுகளுக்கு மத்தியிலும் சீனாவின் இந்த புதிய ஏஐ மாடல் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

China introduces a new advanced AI model called Kimi K3 to the AI ​​world


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->