CBSE 2026-ஆம் ஆண்டிற்கான 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட தேர்வு முடிவுகள் வெளியீடு..!
CBSE 10th Class Second Phase Exam Results for 2026 Released
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளது. இதனை மாணவர்கள் results.digilocker.gov.in என்ற இணையதள முகவரியில் உள்ள DigiLocker முடிவுகள் இணையதளம் (Portal) வாயிலாகத் தங்கள் முடிவுகளைப் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதன்மை வாரியத் தேர்வு 2026 பிப்ரவரி 17 முதல் மார்ச் 11 வரையிலும், அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாரியத் தேர்வு 2026 மே 15 முதல் மே 21 வரையிலும் நடத்தப்பட்டன.
தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020-இன் பரிந்துரைகளுக்கு இணங்க, 2026-ஆம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பிற்கு இரண்டு வாரியத் தேர்வுகளை CBSE அறிமுகப்படுத்தியது. இதில் முதன்மை வாரியத் தேர்வு 2026 பிப்ரவரி 17 முதல் மார்ச் 11 வரையிலும், அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாரியத் தேர்வு 2026 மே 15 முதல் மே 21 வரையிலும் நடத்தப்பட்டன.
அதன்படி, 2026-ஆம் ஆண்டின் முதன்மை வாரியத் தேர்வில் பங்கேற்ற தகுதியுள்ள மாணவர்களுக்கு, தங்கள் தேர்ச்சித் திறனை மேம்படுத்திக்கொள்ளும் கூடுதல் வாய்ப்பை இந்த இரண்டாம் கட்ட வாரியத் தேர்வு வழங்கியது. அதன்படி, 2026-ஆம் ஆண்டின் வழக்கமான மாணவர்களுக்கு, இவ்விரு தேர்வுகளிலும் அவர்கள் பெற்ற மதிப்பெண்களில் சிறந்ததே இறுதி முடிவைத் தயாரிப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
English Summary
CBSE 10th Class Second Phase Exam Results for 2026 Released