குதிரை பேரம் பற்றி பேசலாமா..? 47 பேரை வைத்துக்கொண்டு முதலமைச்சர் ஆகலாம் என பேசினாரா இல்லையா? இபிஎஸ்க்கு செங்கோட்டையன் கேள்வி..? - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம், கோபி நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் தரக்கட்டுப்பாட்டு மையம் மற்றும் ஆய்வகத்தை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

குதிரை பேரம் என்றெல்லாம் சொல்ல கூடாது. எடப்பாடி பழனிச்சாமி செய்யாத காரியம் ஒன்றுமில்லை என்றும், அவர் நெஞ்சிலே கை வைத்து சொல்ல வேண்டும். 47 பேரை வைத்துக்கொண்டு முதலமைச்சர் ஆகலாம் என பாண்டிச்சேரியில் பேசினாரா இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனை முஸ்லிம் லீக் தலைவர் தெளிவாக சொல்லியிருக்கிறார் என்று சுட்டிக்காட்டியதோடு, அதற்கு இதுவரை எடப்பாடி பதில் தரவில்லை என்றும், இன்று அதனை எடப்பாடி பொய் என கூறுகிறார். அதிமுகவிலிருந்து வெளியே வந்தவர்கள் அனைவரும் அதற்கான காரணத்தை கூறி விட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், 'நடந்தாய் வாழி காவிரி திட்டம்' செயல்படுத்த வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கேட்டுள்ளார். அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கதர்துறை அமைச்சர் டெல்லி சென்று ஒன்றிய அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2006-இல் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது முதல் தவறு என வைகோ கூறியது அவர் கருத்து என்றும், அதற்கு மாற்று கருத்து சொல்வது சரியாக இருக்காது என்று கூறியுள்ளார்.

அத்துடன், வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு 25,000 ரூபாய் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது அவர்களின் கோரிக்கை. இது குறித்து, நிதி நிலைமைக்கு ஏற்ப முதல்வர் முடிவு செய்வார் என்று அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sengottaiyan asked EPS whether he talked about becoming the Chief Minister with 47 people or not


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->