விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் கார் மீது கல்வீச்சு தாக்குதல்; கலரவத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக சி.வி.சண்முகம் மீது வழக்கு பதிவு..! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த வல்லம் ஒன்றிய அதிமுக கூட்டத்தில் பங்கேற்க விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பசுபதி நேற்று முன்தினம் அங்கு சென்றுள்ளார். 

அப்போது சி.வி.சண்முகம் தரப்பினர் கூட்டம் நடத்தவிருந்த இடத்திற்கு வெளியே நின்று பசுபதியை தடுத்து நிறுத்தி, கோஷமிட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கோஷ்டி மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த மோதல் குறித்து இரு தரப்பினரும் செஞ்சி போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதில் பசுபதி தரப்பை சேர்ந்த சேட்டு என்கிற கணேசன் கொடுத்த புகாரின்பேரில், சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 08 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

மறுப்புறம் சி.வி.சண்முகம் தரப்பை சேர்ந்த கீழ்மாம்பட்டு நடராஜன் என்பவர் அளித்த புகாரின் படி, அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி உள்ளிட்ட 11 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், பசுபதி கார் மீது கல்வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர் அளித்த மற்றொரு புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அவரது அண்ணன் ராதாகிருஷ்ணன் மற்றும் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் உள்பட 20 பேர் மீது கலரவத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், கல்வீசி தாக்குதல் உள்ளிட்ட 04 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A case has been registered against CV Shanmugam for allegedly throwing stones at the car of the Villupuram district AIADMK secretary


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->