அர்ஜெண்டினா ஜாம்பவான் மரடோனாவின் 'Hand Of God' சர்ச்சை பந்து ஏலத்தில்; 77 கோடி வரை ஏலம் போகலாம்..? - Seithipunal
Seithipunal


1986 உலகக்கோப்பையில் மரடோனாவின் கைகளால் அடிக்கப்பட்ட 'Hand Of God' கோல் என்று அழைக்கப்படும் கால்பந்து விலைக்கு வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் 1986 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில், இங்கிலாந்து-அர்ஜெண்டினாவின் காலிறுதி போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் காலத்தால் அழிக்க முடியாத ஒரு நிகழ்வு நடந்தேறியது.

அதாவது, அர்ஜெண்டினாவின் ஜாம்பவனான மரடோனா சர்ச்சைக்குரிய 'கடவுளின் கை கோல்'-ஐ அடித்தது அந்தப்போட்டியில் தான். அவர் கையால் தட்டிவிட்ட கோல் தற்போதைய VAR அம்சம் இல்லாததால் நடுவர்களால் அங்கீகரிக்கப்பட்டது. போட்டிக்குப் பிறகு அந்த கோல் குறித்து அப்போது பேசிய மரடோனா, 'மரடோனாவின் தலையாலும், கடவுளின் கையாலும்' அடிக்கப்பட்டது என்று கூறியது தற்போது வரை வரலாற்றில் அழியாத சம்பவமாக பதிவாகியுள்ளது.

அதனாலேயே அந்த கோல் 'Hand of God Goal' நினைவு கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது  உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

இதிலும் காலிறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டினா - இங்கிலாந்து அணிகள் பல பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் கடைசி வரை கோல் அடிக்காமல் இருந்த அர்ஜென்டினா அணி, கடைசி 10 நிமிடங்களில் கோல் அடித்து வெற்றிப்பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

முன்னதாக 1986-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மரடோனா கைகளால் கோல் அடித்து வரலாற்றுப் புகழ்பெற்ற பந்தை ஹெரிட்டேஜ் நிறுவனம் தற்போது ஏலம் விட உள்ளது. இதன் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் சுமார் 21 கோடி ரூபாய் ஆகும். இது அதிகபட்சமாக 77 கோடி ரூபாய் வரை ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடுவரிடம் பத்திரமாக இருந்த இப்பந்தின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டியில் விளையாடவுள்ள நிலையில், இந்த மாத இறுதியில் வரலாற்றுப் புகழ்பெற்ற பந்தின் ஏலம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maradona's controversial Hand Of God ball could fetch up to Rs 77 crore at auction


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->