விமான பயணியின் நம்பிக்கையால் விசாரணை வளையம்.. பதறிப்போன 147 பயணிகள்.! - Seithipunal
Seithipunal


விமானத்தின் இயந்திரத்திற்கு நாணயத்தை வீசி சென்றால், செல்லவேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக சென்றுவிடலாம் என்று நினைத்த நபரின் செயலால் விமானமே இரத்து செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. 

சீனா என்னதான் உலக நாடுகளுக்கு இணையாக பல்வேறு விஷயங்களை செய்து வந்தாலும், அங்கும் சில மூட நம்பிக்கைகள் என்பது இருந்து வருகிறது. சீனாவின் கிழக்கு பகுதியை சார்ந்த விமான பயணி, விமானத்தின் இயந்திரத்தில் நாணயத்தை வீசி சென்றால், சென்றடைய வேண்டிய இடத்திற்கு பத்திரமாக செல்லலாம் என்ற நம்பிக்கையில் இருந்து வந்துள்ளார். 

சீனாவில் உள்ள கிழக்கு சீனா ஷாண்டோங் மாகாணத்தில் இருந்து, தெற்கு சீனாவில் உள்ள ஹய்னான் மாகாணத்தின் குவாங்சி பெய்பு வளைகுடா பகுதிக்கு விமானம் புறப்பட தயாராக இருந்துள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணி, விமான இயந்திரத்தில் 6 நாணயத்தை மேற்கூறிய மூடநம்பிக்கையில் வீசியுள்ளார்.

இந்நிலையில், அவர் விமான இயந்திரத்தில் நாணயத்தை வீசியதால் விமானம் இயந்திர கோளாறு என சமிக்கை கொடுக்கவே, அனைத்து பயணிகளும் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட பின்னர் உண்மை தெரியவந்துள்ளது. 

சம்பந்தப்பட்ட நபர் தற்போது காவல் துறையினரின் விசாரணை வளையத்திற்குள் இருக்கும் நிலையில், உண்மையை அறிந்த பயணிகள் பெரும் கொந்தளிப்பிற்கு உள்ளாகினர். பின்னர், மாற்று விமானம் மூலமாக 147 பயணிகள் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China Flight Passenger Through Coin to Flight Machine Passengers and Crew Shocked 27 April 2021


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal