சீனா உருவாக்கிய "முதல் பயணிகள் விமானம்"... இன்று சேவையை தொடங்கியது...! - Seithipunal
Seithipunal


சீனாவின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானமான சி919 தனது சேவையை இன்று ஷாங்காயில் தொடங்கியது. தனது முதல் பயணமாக ஷாங்காயின் ஹாங்கியாவே விமான நிலையத்திலிருந்து பெய்ஜிங்கிற்கு இயக்கப்பட்டது.

இந்த சி919 விமானம் சீன அரசுக்குச் சொந்தமான வணிக விமானக் கழகம் "காஸ்மெக்" உதவியுடன் உருவாக்கப்பட்டது. இந்த விமானத்தில் சுமார் 160 பயணிகள் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட எரிபொருள் திறன் மற்றும் குறைந்த இயக்கச் செலவுகளை மேம்படுத்தும் முறை என பல்வேறு தொழில் நுட்பங்களை உள்ளடக்கியுள்ளது.

மேலும் இந்த சி919 விமானம், போயிங் 737 மற்றும் ஏர்பஸ் ஏ 320 ஆகிய இரண்டு அமெரிக்கா விமானங்களுக்கு போட்டியாக சீன அரசால் தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இதனிடையே உலகளாவிய விமானப் போக்குவரத்து சந்தையில் ஒரு முக்கிய பங்காளியாக மாறுவதற்கும், வெளிநாட்டு விமான உற்பத்தியாளர்களை நம்பியிருப்பதைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த விமானம், ஒரு சிறந்த சாதனை என சீன அதிபர் ஜி ஜின்பிங் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

China first passenger plane starts service today


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->