ஜப்பான் உணவை இறக்குமதி செய்ய சீனா தடை.! - Seithipunal
Seithipunal


ஜப்பான் உணவை இறக்குமதி செய்ய சீனா தடை.!

ஜப்பானில் கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலால் புகுஷிமா அணுமின் நிலையம் சேதம் அடைந்தது. கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டதுடன், பல ரியாக்டர்கள் நிரந்தரமாக சேதமடைந்தன. அவற்றை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவது சாத்தியமில்லை என்பதால் அணுமின் நிலையம் மூடப்பட்டது. 

அதேசமயம், அணு மின் நிலையத்தில் அணு உலைகளை குளிர்விக்க பயன்படுத்தப்பட்ட தண்ணீரை சுத்திகரித்து கடலில் கலக்க ஜப்பான் அரசு முடிவு செய்து அதற்கான அனுமதியை ஐ.நா. சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பிடம் கேட்டது. இதையடுத்து பலகட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில், சீன அரசு ஜப்பான் நாட்டிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது. சீன அரசு எடுத்துள்ள இந்த முடிவிற்கு ஜப்பான் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

 "அணு உலையைக் குளிரூட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டு, பல ஆண்டுகளாக சேகரித்து வைக்கப்பட்டிருந்த அந்த நீா், தற்போது பாதுகாப்பான அளவுக்கு கதிா்வீச்சு நீக்கப்பட்டுள்ளதால் அந்த நீரை கடலில் கலப்பது ஆபத்து இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், சீன அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இதற்கிடையே, கடலில் ஃபுகுஷிமா அணு உலை நீரைக் கலக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று தென் கொரியாவில் நூற்றுக்கணக்கானவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

china ban jappan foods import


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->