எங்களுடைய அனுபவங்களும், பார்வைகளும் பிறருக்கு பயனுள்ளவையாக இருக்கும் - அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்.! - Seithipunal
Seithipunal


மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆஸ்திரியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சரான அலெக்சாண்டர் ஸ்காலென்பர்க்கை சந்தித்துப் பேசினார். 

அதன்பின்னர், இரண்டு நாட்டு அமைச்சர்களும் ஒன்று சேர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினர். அப்போது மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: "பயங்கரவாதத்தின் காரணமாக சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை குறித்து ஆஸ்திரிய நாட்டு தலைவர்களுடன் பேசினேன். 

அதுமட்டுமல்லாமல், எல்லை கடந்த பயங்கரவாதம், வன்முறை, தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதம் உள்ளிட்டவற்றை குறித்தும் நாங்கள் விரிவாக பேசினோம். 

நாட்டில் போதை பொருட்கள், சட்டவிரோத ஆயுத விற்பனை மற்றும் பிற வடிவிலான சர்வதேச குற்றங்கள் உள்ளிட்டவை ஒன்றுடன் ஒன்று ஆழ்ந்த தொடர்பில் இருக்கும்போது, மேலே குறிப்பிட்ட பயங்கரவாத விளைவுகளை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் எல்லாம் அடக்கிவிட முடியாது. 

இந்த பயங்கரவாதத்தின் மையம் இந்தியாவுக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது. எங்களுடைய அனுபவங்களும், பார்வைகளும் பிறருக்கு பயனுள்ளவையாக இருக்கும்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central minister jaisangar visit austiriya country


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->