பொது இடங்களில் ஹிஜாப் அணியாதவர்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா.!
CCTV camera to monitor people who don't wear hijab in public places in Iran
ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சில இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஈரானில் கடந்த ஆண்டு மாஷா அமினி என்ற இளம் பெண் உயிரிழந்ததை தொடர்ந்து ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது.
இந்த ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு இனி ஹிஜாப் அணியை மட்டும் என தீயிட்டு கொளுத்தினர். இந்தப் போராட்டத்தில் சுமார் 300 பேர் வரை கொல்லப்பட்டதாகவும், அதில் 40 பேர் சிறுமிகள் எனவும் ஐநா அதிர்ச்சி தகவலை தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் ஈரானில் பொது இடங்களில் ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஹிஜாப் சட்டத்தை மீறுபவர்களுக்கு குறுஞ்செய்தி எச்சரிக்கை விடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றத்தை மீண்டும் செய்தால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காரில் பயணிக்கும் போது ஆடை குறியீட்டை மீறினால் வாகனத்தின் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்படும் எனவும் மீண்டும் குற்றம் செய்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
CCTV camera to monitor people who don't wear hijab in public places in Iran