பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்திய ஓட்டுநர்.! கடைக்குள் புகுந்த கார்.! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்க : பிரேக்-க்கு பதிலாக ஆக்சிலேட்டரை ஓட்டுனர் மிதித்ததால், அதிவேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். 

இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டின் டெம்பேயில் இயங்கிவரும் ஒரு சில்லரை விற்பனை கடைகள் இரண்டு ஊழியர்கள் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த கடையின் கண்ணாடி கதவுகளை உடைத்துக்கொண்டு கார் ஒன்று உள்ளே நுழைவதை பார்த்ததும், இருவரும் தலைதெறிக்க ஓட முயற்சித்தனர்.

ஆனால் அதற்குள் இரண்டு ஊழியர்கள் மீதும் கார் மோதி விபத்தானது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து கடையில் இருந்த மற்ற ஊழியர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


 

இது குறித்து போலீசார் முதல் கட்டமாக கார் ஓட்டுனரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் காரில் பிரேக்-க்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்து இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அவர் சொன்னது உண்மை என்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து ஓட்டுநர் கவனக்குறைவாக செயல்பட்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

car accident cctv video usa


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->