காதலுனுக்கு லாட்டரியில் கிடைத்த ₹30 கோடி பணத்தை சுருட்டிக்கொண்டு பாய் பெஸ்டியுடன் எஸ்கேப் ஆன கனடா காதலி!
canada Girlfriend Lottery scam
வின்னிபெக்கைச் சேர்ந்த லாரன்ஸ் கேம்பல், வாங்கிய லாட்டரி சீட்டில் 5 மில்லியன் கனடா டாலர்கள் (சுமார் ₹30 கோடி) வென்றிருந்தார்.
வங்கிக் கணக்கு இல்லாத காரணத்தால், மேற்கு கனடா லாட்டரி கார்ப்பரேஷனின் ஆலோசனையின்படி, அந்த பணத்தை தனது காதலி மெக்கேயின் பெயரில் டெபாசிட் செய்ய ஒப்புக் கொண்டார். ஒன்றரை ஆண்டுகளாக உறவில் இருந்ததை நம்பிக்கை அடிப்படையாகக் கொண்டு, இந்த முடிவை எடுத்ததாக கூறியிருந்தார்.
ஊடகங்கள், கேம்பல் தனது லாட்டரி வெற்றியை காதலிக்குப் பகிர்ந்ததாக புகழ்ந்தபடியே செய்திகளை வெளியிட்டன. வெற்றிக்குப் பின் இருவரும் பொதுவிடங்களில் இணைந்து காணப்பட்டனர்.
ஆனால் அதனையடுத்து, மெக்கே திடீரென தொடர்பு துண்டித்ததுடன், காணாமல் போனதாகவும், கடைசியாக வேறொரு ஆணுடன் இருப்பதைக் கண்டதாகவும் கேம்பல் கூறினார்.
மெக்கே தனது லாட்டரி பணத்தை கைப்பற்றியதாகக் கூறிய கேம்பல், தவறான ஆலோசனை வழங்கியதாக லாட்டரி நிறுவனத்தின்மீதும் வழக்குத் தொடர்ந்தார்.
English Summary
canada Girlfriend Lottery scam