வங்காளதேச வன்முறைக்கு அமெரிக்காவே காரணம் - முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


வங்காளதேச வன்முறைக்கு அமெரிக்காவே காரணம் என்று, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா குற்றம் சாட்டி உள்ளார்.

இன்று தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஷேக் ஹசீனா அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு:

"என்னுடைய மண்ணின் மக்களிடம், தயவுசெய்து தீவிரவாதிகளின் கைப்பாவை ஆகிவிட வேண்டாம் என்று இந்த தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

நடந்த வன்முறை கலவரத்தில் பல தலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்றும் உழைக்கும் தொழிலாளர்கள் கொடுமை செய்யப்பட்டு வருகிறார்கள். 

பலரின் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன என்று வருகின்ற ஒவ்வொரு செய்தியை பார்க்கும்போது என் இதயம் கண்ணீர் வடிக்கிறது.

எனது தந்தையும் என் குடும்பத்தினரும் பாடுபட்ட உருவாக்கிய தேசத்தின் எதிர்காலத்திற்காக நான் என்றென்றும் உறுதியாக இருக்கிறேன்.

செயின்ட் மார்டின் தீவை விட்டுக்கொடுத்து, வங்காள விரிகுடாவில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை அனுமதித்திருந்தால் நான் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருக்க முடியும் (நடந்த கலவரங்களுக்கு பின்னணியில் அமேரிக்கா இருப்பதாக குற்றம் சாட்டுகிறார்).

படிக்கும் மாணவர்களின் சடலங்களை வைத்து அவர்கள் ஆட்சிக்கு வர விரும்பினார்கள். ஆனால், நான் அதற்க்கு வழி வகுக்காமல் அதை, நானே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தேன்" என்று ஷேக் ஹசீனா தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bangladesh violence Sheikh Hasin


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->