2026 பிப்ரவரி 12-இல் வங்கதேச பொதுத்தேர்தல்..!
Bangladesh to hold general elections on February 12 2026
வங்கதேசத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலை அந்நாட்டின் முக்கிய கட்சிகள் புறக்கணித்தன. அந்த தேர்தலில் ஷேக் ஹசீனா வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆக பதவியேற்றார். ஆனால், சில மாதங்களில் அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் வன்முறையாக வெடித்தது.
இதனையடுத்து ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அதனை தொடந்து யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சியமைத்துள்ளது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இது குறித்து அந்நாட்டு அதிபர் ஷஹாபுதீனுடன் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆலோசனை நடந்தினர்.
இந்நிலையில், அடுத்தாண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டு தேர்தல் நடத்தப்படவுள்ளதாக கமிஷனர் நஸீர் உதீன் டிவி மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அறிவித்துள்ளார்.

மொத்தம் 300 தொகுதிகளை கொண்ட வங்கதேச பாராளுமன்ற தேர்தலுக்கு நாளை ( டிசம்பர் 12) முதல் டிசம்பர் 29 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், வேட்புமனு மீதான பரிசீலனை டிசம்பர் 29 முதல் 2026 ஜனவரி 04 வரை நடைபெறும்.
இதன் முடிவுகளை எதிர்த்து ஜனவரி 11-ஆம் தேதி வரை முறையிடலாம். அதன் மீதான முடிவு ஜனவரி 12 அறிவிக்கப்படும். வேட்புமனுக்களை திரும்ப பெற ஜனவரி 20-ஆம் தேதி கடைசி நாளாகும்.
இந்நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு, முகமது யூனுஸ் அரசு தடை விதித்துள்ளது. இதனால், அக்கட்சியால் தேர்தலில் போட்டியிட முடியாது நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து மற்றொரு முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சி, ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி இடையே இந்த தேர்தலில் போட்டி நிலவுகிறது.
English Summary
Bangladesh to hold general elections on February 12 2026