மின்சார ஸ்கூட்டர்களுக்கு தடை.!! எங்குத் தெரியுமா? - Seithipunal
Seithipunal


மின்சார ஸ்கூட்டர்களுக்கு தடை.!! எங்குத் தெரியுமா?

உலகம் முழுவதும் மக்கள் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், பிரபல சுற்றுலாத் தலமான பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் மின்சார ஸ்கூட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

அதாவது பாரீசில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக சாலையில் ஆங்காங்கே மின்சார வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருக்கும். தேவைப்படுபவர்கள் அதனை ஸ்கேன் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இந்த வாகனத்தை 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாராக இருந்தாலும் பயன்படுத்த முடியும்.

இதனால், பாரீசில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அதன் காரணமாக இந்த மின்சார வாகனங்களை தடைசெய்ய வேண்டும் என்று பலர் குரல் எழுப்பி வந்ததையடுத்து பாரீஸ் நகர மேயர் அனீ ஹிடால்கோ வாக்கெடுப்பு நடத்தினார். 

இந்த வாக்கெடுப்பில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர். அதில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மின்சார வாகனத்தை தடை செய்ய வேண்டும் என்று வாக்களித்தனர்.

அதன் படி அந்த நகரில் மின்சார வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் தனிநபர்கள் தங்களது மின்சார வாகனத்தை பயன்படுத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ban electric scooter in france


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->