வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மற்றுமொரு ஹிந்து சுட்டுக்கொலை; 03 வாரங்களில் 05வது சம்பவம்..!
Another Hindu shot dead in Bangladesh
வங்கதேசத்தில் கடந்த மூன்று வாரங்களில் 04 ஹிந்துக்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ள நிலையில், மீண்டும் ராணா பிரதாப் (45) என்ற ஹிந்து நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள், ஹிந்து கோவில்கள் மீதும் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. கடந்த மாதத்தில், இந்தியாவிற்கு எதிரான நிலையில், இருந்த வங்கதேச மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வை தொடர்ந்து, அங்கு வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.
முன்னதாக, தொழிலதிபர் கொகோன் தாஸ் என்பவரை தாக்கயி மர்ம கும்பல், அவரை தீ வைத்து எரித்துக் கொன்றது. அதனை தொடர்ந்து. மேலும் ஒரு ஹிந்து நபர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அந்நாட்டின், ஜஷோர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுட்டுக் கொல்லப்பட்டவர் கேசப்பூர் உபாசிலாவில் உள்ள அருவா என்ற கிராமத்தைச் சேர்ந்த ராணா பிரதாப் (45) என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் சந்தையில் இருந்த போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள், அவரை சரமாரியாக சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் ராணா பிரதாப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த போலீசார், உடனடியாக அங்கு சென்று, ராணா பிரதாப் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தப்பியோடிய மர்ம நபர்கள் யார் என்பது பற்றியும் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்துக்களுக்கு எதிராக நடக்கும் இவ்வாறு கொடூர சம்பவங்களால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
English Summary
Another Hindu shot dead in Bangladesh