என் மீது கோபம்! – மம்தானி வெற்றிக்குப் பின் டிரம்பின் அதிரடி பதில்...!
Angry at me Trumps dramatic response after Mamtanis victory
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளி ஜோஹ்ரான் மம்தானி, அதிபர் டிரம்ப் ஆதரவு பெற்ற குடியரசுக் கட்சி வேட்பாளரை வீழ்த்தி பிரமாண்ட வெற்றி பெற்றார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், ஏற்கனவே டிரம்புடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டிருந்த மம்தானி தனது வெற்றிப் பேச்சில் டிரம்பை கடுமையாக விமர்சித்தார். இதனால் கடும் கோபமடைந்த டிரம்ப், மம்தானிக்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு பேட்டியில் டிரம்ப்,"மம்தானியின் வெற்றி உரை மிகவும் கோபத்துடன் இருந்தது. அவர் என்மீது கடுமையாகப் பேசியுள்ளார். இது அவருக்கே பாதகமாகி விடும். அமெரிக்க அரசுடன் ஒத்துழைக்காவிட்டால் அவர் பெரும் இழப்பைச் சந்திப்பார். நியூயார்க் வளர்ச்சி அடைய நாங்கள் விரும்புகிறோம் .
ஆனால் அதற்கு அவர் நிதானமாகவும் மரியாதையாகவும் இருக்க வேண்டும்" என்றார்.மேலும், கம்யூனிசத்தை விமர்சித்த டிரம்ப்,“ஆயிரம் ஆண்டுகளாக கம்யூனிசம் வேலை செய்யவில்லை, இப்போது அது மாறாது. நியூயார்க் நகரம் கம்யூனிச சாயலில் மூழ்கினால், புளோரிடா தான் மக்களின் புதிய அடைக்கலம் ஆகும்”என்று கடுமையாகச் சாடினார்.
தேர்தல் முன்பே, “மம்தானி வென்றால் நியூயார்க் மோசமாகிவிடும்” என்று டிரம்ப் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Angry at me Trumps dramatic response after Mamtanis victory