இரவில் குலுங்கிய அந்தமான் நிகோபார் தீவுகள்: 4.7 ரிக்டர் பதிவு!
Andaman and Nicobar Islands earthquake
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 4.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு 8.15 மணியளவில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 அலகுகளாக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 80 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பொருட் சேதம் குறித்து இதுவரை எந்த ஒரு தகவல் வெளியாகவில்லை.
இதற்கு முன்னதாக கடந்த அக்டோபர் 20ஆம் தேதி இதே போல் அந்தமானில் 4.2 ரிக்டர் அளவில நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
Andaman and Nicobar Islands earthquake