போர் பதற்றம் நடுவே அதிரடி முடிவு: வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ்...! - Seithipunal
Seithipunal


தென் அமெரிக்க நாடான வெனிசுலாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடும் பதற்றம் நிலவி வருகிறது. வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக குற்றம்சாட்டிய அமெரிக்கா, அதனைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது.

போதைப்பொருள் கடத்தலில் வெனிசுலா அரசின் உடந்தை இருப்பதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியது.இந்த பின்னணியில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் அமெரிக்கா நேரடி ராணுவ நடவடிக்கைகளில் இறங்கியது. கரீபியன் கடல் மற்றும் கிழக்கு பசிபிக் கடல் பகுதிகளில் சந்தேகத்தின் பேரில் பயணித்த படகுகளை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதுவரை 35 படகு தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதுடன், அதில் 115 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே, அமெரிக்கா தன்னை ஆட்சியில் இருந்து அகற்ற சதி செய்கிறது என்றும், வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை கைப்பற்ற முயற்சிக்கிறது என்றும் அதிபர் மதுரோ கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, “விரைவில் வெனிசுலா மீது தாக்குதல் நடத்த உத்தரவிடுவேன்” என அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்தார்.இந்த நிலையில், நேற்று அதிகாலை அமெரிக்கா வெனிசுலா மீது சரமாரி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியது.

தலைநகர் கராகஸ் நகரின் வானில் அமெரிக்க போர் விமானங்கள் தாழ்வாக பறந்து குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, புளோரிடாவில் உள்ள தனது தனியார் கிளப்பில் கடந்த இரண்டு வாரங்களாக தங்கி இருந்த டிரம்ப், அங்கிருந்தபடியே சமூக வலைத்தளத்தில் பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டார்.

அதில், “அமெரிக்க சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து வெனிசுலா மீது வெற்றிகரமான தாக்குதல் நடத்தப்பட்டது. அதிபர் மதுரோவும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்” என பதிவிட்டார்.மேலும், வெனிசுலா நாட்டை அமெரிக்கா தற்காலிகமாக நிர்வகிக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த உத்தரவை வெனிசுலா உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு எண்ணெய், பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளை டெல்சி ரோட்ரிக்ஸ் கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amidst war tensions dramatic decision Venezuela interim president Delcy Rodriguez


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->