அமெரிக்கக் கனவு...நீச்சல் குளத்தில் முடிந்த சோகம்...! ஐதராபாத் பெண் இன்ஜினியர் பிணமாக மீட்பு...! - கொலையா? தற்கொலையா?
American dream tragedy that ended swimming pool Hyderabad female engineer body recovered Murder Suicide
ஐதராபாத் நியூ சிவபுரி காலனியைச் சேர்ந்த தேவேந்திர ரெட்டி-சுனிதா தம்பதியின் மகள் ஸ்ரீவீணா (28). இவருக்கும் பிரசாந்த் ரெட்டிக்கும் கடந்த 2023-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தம்பதியினர் இருவரும் அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் மென்பொருள் பொறியாளர்களாக பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில், தனது நெருங்கிய தோழியின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீவீணா, இரண்டு நாட்களுக்கு முன்பு புளோரிடா சென்றிருந்தார்.
அங்கு உள்ள நீச்சல் குளத்தில் அவர் மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்த நிலையில் கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தகவல் அறிந்து விரைந்த மீட்புக்குழுவினர், ஸ்ரீவீணாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.தனது மகளுக்கு நீச்சலில் சிறந்த திறமை இருந்ததாகவும், அதனால் அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் பெற்றோர் கதறி அழுதனர்.
இந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.தகவல் அறிந்த எல்.பி.நகர் எம்.எல்.ஏ., உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், ஸ்ரீவீணாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உயரதிகாரிகளுடன் பேசி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.
English Summary
American dream tragedy that ended swimming pool Hyderabad female engineer body recovered Murder Suicide