அமெரிக்க அதிநவீன போர் விமானம் மாயம்! விமானி நிலை?
America most advanced fighter plane missing
உலகின் மிகப்பெரிய விமான படையை கொண்டுள்ள நாடாக விளங்கும் அமெரிக்காவின் படையில் அதிநவீன போர் விமானங்கள் உள்ளது.
தென் கரோலினா கடலோர பகுதியில் 80 மில்லியன் டாலர் மதிப்பிலான எப்-35 ரக விமானம் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென விமானத்துக்கும் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டு, போர் விமானம் எங்கே சென்றது என தெரியவில்லை.

இந்நிலையில் விமானத்தில் இருந்த விமானி பாராசூட் மூலமாக குதித்து உயிர்பிழைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் விமானத்தின் நிலை குறித்து மர்மமாக உள்ளதால் விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் நவீன ரக போர் விமானம் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
America most advanced fighter plane missing