இயான் புயல் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்வு ..! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டில் உள்ள புளோரிடா மாகாணத்தில் கேயோ கோஸ்டா கடற்கரை பகுதியருகே கடந்த புதன்கிழமை மதியம் இயான் புயல் கரையை கடந்ததனால், மணிக்கு 150 மைல்கள் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. 

புளோரிடா மாகாணத்தையே புரட்டி சென்ற இயான் புயல், தெற்கு கரோலினா கடற்கரையில் நேற்று முன்தினம் 2-வது முறையாக கரையை கடந்தது. இந்த புயலால் நீரில் மூழ்கிய பகுதிகளில் உயிர் பிழைத்தவர்களை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். 

இதுவரை, புயலில் சிக்கி குறைந்தது 54 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத்தொடர்ந்து, புயல் மீட்புப் பணிகளில் ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டனர் என்று புளோரிடா மாகாண கவர்னர் ரான் டி சாண்டிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தப் புயலினால், புளோரிடா மாகாணத்தில் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின. உயிர் பிழைத்தவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை உயிரிழந்ததில் புளோரிடாவில் குறைந்தது 76 பேரும், வட கரோலினாவில் நான்கு பேரும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வரும் புதன்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், புயல் பாதித்த இடங்களைப் பார்வையிட்டு, ஆய்வு செய்வதற்கு புளோரிடா செல்ல உள்ளார் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

america iyan storm increase death peoples


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->