விருந்தில் கலந்து கொண்ட அமெரிக்க சிறுமி! போலீசாரை பார்த்தும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


அமெரிக்கா, டொபேகா தலைநகரம் க்ளவுட் கவுன்டி பிராந்தியத்தில் வசித்து வந்தவர் ஜேலி சில்ஸன் (வயது 14) இந்த சிறுமி சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடி விட்டதாக சில்ஸன் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவலின் பெயரில் போலீசார் விசாரணை நடத்தியதில் ஜேலி அவரது நண்பர்களுடன் ஊருக்கு வெளியே உள்ள அரோரா என்னும் பகுதியில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டுள்ளதாக தகவல் கிடைத்தது. 

இதனை அடுத்து காவல்துறையினர் அந்த இடத்திற்கு சென்று ஜேலியை வீட்டிற்கு வருமாறு அழைத்தனர். அப்போது காவல்துறை அதிகாரி ஒருவர் ஜேலி தப்பிக்காதவாறு அவரை பிடித்துக்கொள்ள முயன்றார். 

ஆனால் அதிகாரிகள் சொல்வதை கேட்காமல் ஜேலி திடீரென ஒரு துப்பாக்கி எடுத்து தன்னை தானே சுட்டுக் கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல் துறை அதிகாரிகள் முதலுதவி அளித்தனர். 

இருப்பினும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் விருந்துக்கு வந்திருந்த பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

America girl Shot committed suicide 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->