அல்பேனி தீ விபத்து: இந்திய மாணவி சஹாஜா உடுமலா உயிரிழப்பு...! - 90% தீக்காயம்! - Seithipunal
Seithipunal


தெலுங்கானாவின் ஐதராபாத் அருகே உள்ள ஜோடிமெட்லா பகுதியில் வசித்த 24 வயது சஹாஜா உடுமலா, உயர்கல்விக்காக அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் அல்பெனியில் உள்ள ஒருபுகழ் பெற்ற பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்து வந்தார். அங்கு வெஸ்ட் அவென்யூ பகுதியில் சக மாணவிகளுடன் சேர்ந்து அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வந்தார்.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாலை ஏற்பட்ட திடீர் தீவிபத்து அவரது வாழ்க்கையை சிதைத்துவிட்டது. குடியிருப்பின் உள்ளே வேகமாகப் பரவிய தீக்கொடுமையில் சஹாஜாவும், அவருடன் இருந்த மாணவிகளும் சிக்கிக் கொண்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புக்குழுக்கள் கடுமையாக போராடி அனைவரையும் வெளியே கொண்டு வந்தனர்.ஆனால், சஹாஜாவுக்கு 90% தீக்காயம் ஏற்பட்டது. மேற்பரப்பை மட்டுமல்ல, ஆழமான திசுக்களையும் சேதப்படுத்திய இந்த தீக்காயம் அவரது உயிரைப் பறித்தது.

அருகிலுள்ள மருத்துவமனையில் பல மணி நேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டாலும், நேற்று அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.லேசான காயங்களுடன் உயிர் தப்பிய மற்ற மாணவிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சஹாஜாவின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் துரித நடவடிக்கை எடுத்துள்ளது.திடீர் தீவிபத்துக்கான காரணம் தொடர்பாக அமெரிக்க போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

சஹாஜாவின் மரணம் அவரது குடும்பத்தாரையும், நண்பர்களையும் மட்டுமல்ல, வெளிநாட்டில் கல்வி கற்கும் மாணவர் சமூகத்தையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Albany fire accident Indian student Sahaja Udumala dies 90 percentage burns


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->