$7 பில்லியன் இழப்புக்குப் பின்...! டிரம்ப் கையெழுத்தால் திறந்தது அமெரிக்க அரசு...!
After loss of 7 billion dollar US government reopened Trumps signature
அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், 43 நாட்கள் நீடித்த பொது முடக்கம் இன்று முடிவடைந்தது! பொருளாதாரம் முதல் அத்தியாவசிய சேவைகள் வரை முடங்கிய நிலையில், உலகின் மிகப்பெரிய நாடு கடும் நெருக்கடியைச் சந்தித்தது.
அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கிய அரசு முடக்கம் காரணமாக, 7 லட்சம் ஊழியர்கள் ஊதியமின்றி வேலை செய்தனர், 6.7 லட்சம் பேர் வேலை இழந்தனர், 40 முக்கிய விமான நிலையங்கள் செயல்பாடுகள் பாதிப்பு,ஏழை குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகம் நின்றது.

இதன் விளைவாக, அமெரிக்காவின் வேலையின்மை விகிதம் 4.6% லிருந்து 6% வரை உயர்ந்தது, மேலும் பொருளாதார இழப்பு $7 பில்லியன் டாலர் என காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம் மதிப்பிட்டது.இந்நிலையில், அரசு முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் நிதி மசோதாவை பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியது.
ஆதரவாக: 222 வாக்குகள்
எதிராக: 209 வாக்குகள்
இதில் 6 ஜனநாயகக் கட்சியினரும் ஆதரித்தனர்.
பின்னர், மசோதா செனட் ஒப்புதலுடன் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டதுடன், அரசு அலுவலகங்கள் மீண்டும் இயங்கத் தொடங்குகின்றன.
எனினும், விமான சேவைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் ஆகும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.1981 முதல் இதுவரை 15 முறை அரசு முடக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், டிரம்ப் ஆட்சியிலேயே (2018–19) அதிக நீளமான 35 நாள் முடக்கம் நடந்தது.ஆனால் இம்முறை, 43 நாட்கள் நீடித்த இதுவே அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய அரசு முடக்கம் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
After loss of 7 billion dollar US government reopened Trumps signature