ஆஸி., யில் பயங்கரவாதியை தனி ஆளாக மடக்கிய பிடித்த ஹீரோ அஹமது; 2.5 மில்லியன் டாலர் பரிசு வழங்கி பாராட்டு..! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் பாண்டை கடற்கரையில் திடீரென புகுந்து பயங்கவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொதுமக்கள் 16 பேர் கொல்லப்பட்டனர். அப்போது பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, ஒருவர் பின்னால் இருந்து அவனை சாமர்த்தியமாக மடக்கி பிடித்தார். அத்துடன், அவரிடம் எந்த ஆயுதமும் இல்லாமல் நிராயுதபாணியாக வெறும் கைகளால் பயங்கரவாதியை தாக்கி துப்பாக்கியையும் பறித்து பல உயிர்கள் கப்பாற்ற காரணமாக இருந்தார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி, அவரது அசாத்திய தைரியத்தை உலகம் முழுவதும் அனைவரின் பாராட்டை பெற்றுள்ளார். சிட்னியின் சதர்லேண்ட் பகுதியில் வணிக வளாகம் நடத்தி வரும் அல் அஹமது என்ற 43 வயது என தெரிய வந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அல்-அஹமதுவை நேரில் சென்று, ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நலம் விசாரித்தார்.

அப்போது அஹமதுவை 'ஆஸ்திரேலியாவின் ஹீரோ' என பாராட்டி இருந்தார். இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டை சமாளித்து பல உயிர்களைக் காப்பாற்றிய அஹமதுவுக்கு சமூக நன்கொடைகளாக 2.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.22.41 கோடி) அமெரிக்க டாலர் வழங்கப்பட்டது.  துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட காயங்களுக்கு தற்போது அவர்  மருத்துவமனை சிகிச்சை பெற்று வரும் நிலையில், படுக்கையிலிருந்தே காசோலையைப் பெற்றுள்ளார்.

அந்த கொடூர துப்பாக்கி சூட்டின் போது உயிர்களைக் காப்பாற்ற அவரது துணிச்சலுக்காக அவர் பாராட்டை பெற்றுள்ளார். இரண்டு குழந்தைகளின் தந்தையான அவருக்கு சமூக ஊடகங்கள் மட்டுமல்ல, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பிற உலகத் தலைவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A man who single handedly apprehended a terrorist in Australia has been awarded a 2500000 prize and praised


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->