அமெரிக்காவில் இந்தியர்கள் 04 பேர் சுட்டுக்கொலை; அலுமாரியில் ஒளிந்து உயிரை காப்பாற்றிக்கொண்ட 03 சிறுவர்கள்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது குடும்பத்துடன் வசித்து வந்த விஜயகுமார் (51) என்பவர் வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தங்கள் கேட்டது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விஜயகுமார் வீட்டுக்குள் உடனடியாக நுழைந்துள்ளனர்.

அப்போது, விஜயகுமாரின் மனைவி மீனா டோக்ரா (43), உறவினர்கள் கவுரவ் குமார் (33), நிதி சந்தர் (37), ஹரிஷ் சந்தர் (38) ஆகிய 04 பேர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். குடும்பத் தகராறின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக, மனைவி மற்றும் உறவினர்களை விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விஜயகுமார் துப்பாக்கிச் சூடு நடத்திய போது, அந்த வீட்டுக்குள் 03 சிறுவர்கள் இருந்துள்ளனர். ஆனால், அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு அலமாரியில் ஒளிந்து கொண்டிருந்ததை பார்த்த போலீசார் மீட்டுள்ளனர். குறித்த சிறுவர்களில் ஒருவர் போலீசாரை அவசர எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளமை   குறிப்பிடத்தக்கது. மீட்கப்பட்ட அந்த குழந்தைகளுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

அவர்கள் ஒரு குடும்ப உறுப்பினரின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டனர். விஜயகுமார் மீது கடுமையான தாக்குதல், கொடூரமான கொலை, தீய நோக்கத்துடன் கூடிய கொலை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இச்சம்பவம் கொடூர தொடர்பாக இந்திய தூதரகம் குறிப்பிட்டுள்ளதாவது: ''அட்லாண்டாவில் குடும்பத் தகராறு காரணமாக நடந்த துயரமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் எங்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், துயரத்தில் உள்ள குடும்பத்திற்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன''என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A husband shot and killed four Indians including his wife in the USA due to a family dispute


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->